states

img

ரூ.240 கோடி சுவாஹா

உத்தரப்பிரேதச மாநி லம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த  இடத்தில் பல ஆயிரம் கோடி  செலவுடன்  புதிதாக கட்டப் பட்ட ராமர் கோவிலில் கடந்த  ஜனவரி மாதம் 22 அன்று பிர திஷ்டை விழா நடைபெற்  றது. மக்களவை தேர்தல் பிரச்சார பொருளாக ராமர் கோவில் பிரதிஷ்டை விழா வை கையிலெடுத்த பிரதமர்  மோடி, அரசியல் ஆதாயத் திற்காக அரசு பணத்தில் ரூ. 11,100 கோடி கோடி செலவில்  அயோத்தியை தற்காலிக  சுற்றுலா நகரமாக மாற்றி னார். விமானநிலையம், ரயில்  நிலையம் என அனைத்தும்  பராமரிப்பு மற்றும் புதிதாக  கட்டி எழுப்பப்பட்ட நிலை யில், ரூ.240 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட அயோ த்தி ரயில் நிலையத்தின் சுற்  றுச்சுவர் ஒரு நாள் மழைக்கே தாக்குபிடிக்காமல் இடிந்து விழுந்துள்ளது. 

6 மாதங்கள் கூட தாக்குபிடிக்கவில்லை

அயோத்தியில் புதிதாக புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை கடந்த டிசம்பர் 30 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரயில் நிலையத்தின் பாதுகாப்பு  என்ற பெயரில் சில கிமீ சுற்ற ளவில் பிரம்மாண்ட சுவர்கள்  கட்டப்பட்ட நிலையில், அயோத்தி நகரில் சனியன்று  பெய்த மிதமான கன மழைக்கே ரயில் நிலையத் தின் சுமார் 20 அடி நீளமுள்ள  சுற்றுச்சுவர் இடிந்து விழுந் தது. பல இடங்களில் சுற்று  சுவர்கள் விரிசல் ஏற்பட் டுள்ள நிலையில், ரூ.240 கோடி என்ன ஆனது என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்து வருகிறது.

சமாஜ்வாதி கண்டனம்

240 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலைய சுற்றுச்சுவர் ஒரு நாள் பெய்த மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்  ததற்கு “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் உத்த ரப்பிரதேச மாநில எதிர்க் கட்சியான சமாஜ்வாதி கட்சி  கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து அக்கட்சி யின் தலைவர் அகிலேஷ், “பெரும் செலவில் கட்டப் பட்ட சுற்றுச்சுவர் ஒரு நாள் மழைக்கே தாங்கவில்லை. பாஜக மாடலில் உண்மை முகம் இதுதான்” எனக் கூறி னார்.